மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட லாரி அதிபர் சாவு
நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட லாரி அதிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
நாமக்கல்,
நாமக்கல் என்.கொசவம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). லாரி அதிபர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (46). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொசவம்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
செல்வம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்ல, ரமேஷ் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். நாமக்கல் - துறையூர் சாலை ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற செல்வம் மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி செல்வம் பரிதாபமாக இறந்தார். இதேபோல் ரமேசும் படுகாயம் அடைந்து, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து செல்வத்தின் மனைவி ராஜலட்சுமி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை வலைவீசி தேடி வருகின்றனர்.