ஓய்வுபெற்ற கண்டக்டர் வீட்டில் 6 பவுன் நகை–பணம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு
வெள்ளிச்சந்தை அருகே ஓய்வுபெற்ற அரசுபஸ் கண்டக்டர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்,
வெள்ளிச்சந்தை அருகே பெருஞ்செல்வவிளை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்பிள்ளை(வயது 72). இவர், ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர்.
வேலாயுதம்பிள்ளை உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு ஓய்வுக்காக தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தார். ஆனாலும், தினமும் காலை பெருஞ்செல்வவிளையில் உள்ள வீட்டிற்கு வந்துவிட்டு மாலையில் மீண்டும் சகோதரி வீட்டிற்கு திரும்புவார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு சகோதரி வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி, 1½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம், மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.