அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பேரம்பாக்கத்தில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2015–16–ன்படி ரூ.6½ லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் சேர்ந்து பயன்பெற ஏதுவாக கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடம் கட்டப்பட்டு இதுநாள் வரையிலும் பயன்பாட்டுக்கு வராமல் வீணாக பூட்டி கிடக்கிறது.
அந்த கட்டிடத்தை சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்து காட்சியளிக்கிறது. எனவே கட்டி முடித்தும் திறக்கப்படாமல் உள்ள இந்த அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக திறக்கவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.