சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கோவில்பட்டி லாயல் நூற்பாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலையில் நடந்தது.

Update: 2018-03-06 21:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி லாயல் நூற்பாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலையில் நடந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் கொடி அசைத்து, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு, நூற்பாலை ஊழியர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் நூற்பாலையை சென்றடைந்தனர். அதிக ஒளி பாய்ச்சும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், போக்குவரத்து போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, நூற்பாலை உதவி தலைவர் ராமகிருஷ்ணன், பொது மேலாளர்கள் லட்சுமண சங்கர், சீனிவாசன், சரவணன், மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் விஜயகுமார் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்