தானே: காதலனை சுட்டுக் கொன்று விட்டு காதலியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
மராட்டிய மாநிலம் நலிம்பி கிராமத்தில் காதலனை சுட்டுக்கொன்று விட்டு காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுர சம்பவம் நடந்துள்ளது.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டதில் உள்ள ஒரு கிராமத்தில் காதலியின் கண் முன்னே காதலன் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
கணேஷ் டிங்கா் என்ற இளைஞரும் அவரது காதலியும் நேற்று இரவில் நலிம்பி கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர்கள் இருவரிடம் பணம் கேட்டுள்ளான். ஆனால், கணேஷ் டிங்கரும் அவரது காதலியும் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதை அடுத்து அவா்களை துப்பாக்கியை காட்டி மர்ம நபர், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளான். இதனால், ஆத்திரம் அடைந்த கணேஷ் டிங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உடனே, தன்னிடம் இருந்த துப்பாக்கி மூலம், கணேஷ் டிங்கரை சுட்டுக்கொன்ற மர்ம நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளான்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.