தடையில்லா சான்று இல்லாத 24 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு
தானேயில் தடையில்லா சான்று இல்லாத 24 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை.
தானே,
தானேயில் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று இல்லாத 24 ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என மாநகராட்சி அதிகாரி சந்தீப் மால்வி கூறினார்.
மும்பை கமலா மில் வளாகத்தில் உள்ள ‘மோஜோ’, ‘ஒன்அபோவ்’ கேளிக்கை விடுதிகளில் கடந்த டிசம்பர் 29-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த துயர சம்பவத்தையடுத்து மும்பை உள்பட மாநிலம் முழுவதும் விதிமுறை மீறி செயல்பட்டு வரும் ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தானேயில் கமலா மில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு விதிமுறை மீறி செயல்பட்டு வந்த 35 ஓட்டல்கள் இடிக்கப்பட்டன. 12 ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்தநிலையில் தானேயில் உள்ள 426 ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து இருந்தன. இதில், 80 ஓட்டல்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. 260 ஓட்டல்களின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 86 ஓட்டல்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஓட்டல்களை ‘சீல்’ வைத்து மூட தானே மாநகராட்சி கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து முதல் கட்டமாக நேற்று முன்தினம் தீயணைப்பு துறை தடையில்லா சான்று இல்லாத 13 கேளிக்கை விடுதி மற்றும் ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 11 ஓட்டல்களை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி ‘சீல்’ வைத்தனர்.
மேலும் 2 நாட்களுக்கு தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று இல்லாத ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணி தொடரும் என மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் மால்வி கூறினார்.