காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கமலக்கணணன் வலியுறுத்தினார்.
காரைக்கால்,
டெல்லியில் நடந்த விவசாயம் தொடர்பான கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். பின்னர் மத்திய மந்திரிகள், ஓ.என்.ஜி.சி. தலைவர் மற்றும் ரெயில்வே துறையினரை சந்தித்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மேற்கொள்ளவேண்டிய திட்டப்பணிகளுக்கான உதவிகள் குறித்து பேசினேன். புதுச்சேரி மாநிலத்தின் வேளாண் திட்டங்கள், மத்திய அரசின் உதவி, இந்த திட்டத்தின்கீழ் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து வலியுறுத்தினேன். காவிரி நீர் பிரச்சினையில் புதுச்சேரி மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவலியுறுத்தியுள்ளேன்.
கலாசாரத் துறை மந்திரி மகேஷ்சர்மாவை சந்தித்தபோது, காரைக்கால் பகுதியில் கோலரங்கம் அமைப்பதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. ரெயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் பண்டிட்டிடம், காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக பேரளத்தை இணைக்கும் அகல ரெயில்பாதை அமைக்க ரூ.140 கோடி திட்ட மதிப்பீடு செய்துள்ளதையும், 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்ததையும் இந்த தொகையை ரூ.60 கோடியாக உயர்த்துமாறு வலியுறுத்தினேன். மாநில அரசின் பங்களிப்பு வேண்டுமென அவர் கூறினார். சிறிய மாநிலத்தின் நிதி நிலை குறித்தும், புதுச்சேரிக்கான நிதியை மத்திய அரசுதான் ஒதுக்கிவருகிறது. எனவே, ஒட்டுமொத்த திட்ட நிதியை மத்திய அரசே ஒதுக்கி, விரைவாக திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தினேன்.
தோட்டக்கலை துறை கூடுதல் செயலர் ஜலாஜ் ஸ்ரீவத்ஸவா, இணைச் செயலர் தினேஷ்குமார் ஆகியோரிடம் அடுத்த 10 ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தின் வேளாண் திட்டங்களுக்கு தேவையான உதவி குறித்து விளக்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலர் ரீனாராயை சந்தித்தபோது, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் புதுச்சேரி மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என கோரப்பட்டது.
நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்தபோது ஊரக வளர்ச்சி திட்ட முகமை உதவியை புதுச்சேரி, காரைக்காலுக்கு என தனித்தனியாக பிரித்துத் தருமாறு வலியுறுத்தியுள்ளேன். ஓ.என்.ஜி.சி. தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் சாஸ்திரி சங்கரை சந்தித்தபோது, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களுக்காக ரூ.20 கோடி சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் வழங்குமாறு கோரியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.