தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்டாச்சிமங்கலம்,
கண்டாச்சிபுரம் அருகே உள்ள கொடுக்கப்பட்டை சேர்ந்தவர் ரகோத்தமன் (வயது 60). இவரது மகன் சீனுவாசன்(27). தொழிலாளி இவருக்கும் ரிஷிவந்தியத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சீனுவாசன் தனது மனைவி கவிதாவுடன் ரிஷிவந்தியத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு சீனுவாசன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தியாகதுருகம் அருகே வடதொரசலூர் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே தியாகதுருகம் அண்ணாநகரை சேர்ந்த சாகுல்அமீது என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சீனுவாசன் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சீனுவாசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சாகுல்அமீதுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சீனுவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரகோத்தமன் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.