மணல் அள்ளிய 7 பேர் கைது 6 வாகனங்கள் பறிமுதல்

உப்பிலியபுரம் அருகே மணல் அள்ளிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-03-04 22:15 GMT
உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகேயுள்ள நெட்டவேலம்பட்டி கிராமத்தில் உள்ள பொங்களா ஏரியில் திருட்டுத்தனமாக சிலர் மணல் அள்ளுவதாக பச்சபெருமாள்பட்டி கிராம நிர்வாக அதிகாரி உமாவதிக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரும், அவரது உதவியாளர் ஆபிரகாமும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 7 பேர், டிப்பர்களுடன் கூடிய 5 டிராக்டர்களில் பொக்லைன் எந்திரம் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

அவர்களை கையும், களவுமாக பிடித்த உமாவதி, பொக்லைன் எந்திரம் மற்றும் 5 டிராக்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உப்பிலியபுரம் போலீசில் ஒப்படைத்தார்.

7 பேர் கைது

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்குமார் வழக்குப்பதிவு செய்து உரிய அனுமதியின்றி மணல் அள்ளியதாக கரூர் மாவட்டம், வீரராக்கியம் கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி(வயது 40), பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (41), ராஜா(27), நெட்டவேலம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (31), ஜெயசந்திரன் (40), மெய்யம்பட்டியை சேர்ந்த ராமஜெயம் (29), ரெட்டியார்பட்டியை சேர்ந்த சங்கர்பிரசாத் (32) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்