அ.தி.மு.க.வில் பிரிந்தவர்கள் இணைவார்கள் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்கள், அ.தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே செவல்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது கூறியதாவது:-
ஜெயலலிதா இல்லை, கருணாநிதி அரசியலில் இல்லை ஆட்சியை பிடித்து விடலாம் என்று கமல்ஹாசன் தப்புக்கணக்கு போட்டு கட்சி தொடங்கியுள்ளார். மக்கள் பணியாற்றாமல் அரசியலில் ஜெயிக்க முடியாது என்று நடிகர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு வரலாறு உண்டு, நீண்ட காலமாக மக்கள் பணியாற்றினர். 4 ஆயிரம் பேரை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் 4 மாதம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார். அ.தி.மு.க.வில் சாதாரண கிளை கழகத்தில் கூட 50 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். எந்த கட்சியாலும் நடிகர்களாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது.
பென்னாகரம் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அழிந்தது என்று கூறினார்கள். ஆனால் இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. அசுர வளர்ச்சி அடைந்தது. அ.தி.மு.க. தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் மாற்றுக்கட்சிக்கு செல்ல மாட்டார்கள். அ.தி.மு.க.வில் தற்போது பிரிந்தவர்கள் இணைவார்கள், அ.தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும். ஒட்டிய வயிரையும், கிழிந்த சட்டையையும் பார்த்து தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துதான் போவார்கள்.
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. செவல்பட்டி கிராமம் விருதுநகர் எம்.பி.யால் தத்தெடுக்கப்பட்டுள்ளது. செவல்பட்டியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கல்யாண மண்டம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் நெல்லை கபாலி, மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், முன்னாள் தொகுதி செயலாளர் சீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், அசோக் குமார், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செவல்பட்டி ரவிக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமராஜ், பேரவை ஒன்றிய இணைச்செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.