இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் முத்தையாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-03-04 22:45 GMT
ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் முத்தையாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வின்ஸ் எல்ஜின், செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் சகாயராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாநகர இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பெனில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரத்து 400 கோடி பணத்தை ஊழல் செய்து விட்டு தலைமறைவான நீரவ்மோடியை கைது செய்ய வேண்டும், மத்திய அரசின் உதவியுடன் நடந்து வரும் ஊழல்களை மக்களிடம் ஆதாரத்துடன் பேசி வரும் ப.சிதம்பரத்தை பழிவாங்கும் நோக்கில், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ததற்கு மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சாயர்புரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சுயம்புலிங்கம், கோவில்பட்டி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் அந்தோணி பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்