கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இலவம் காய் சீசன் தொடங்கியது
கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இலவம் காய் சீசன் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கம்பம்,
கம்பம் நகரின் மேற்கு பகுதியான ஏகலூத்து, புதுக்குளம், கம்பம்மெட்டு அடிவாரம், மணிக்கட்டி ஆலமரம், மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு மற்றும் தட்டை, பாசிப்பயறு, கொட்டை முந்திரி மற்றும் மா ஆகியவற்றை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதேபோல் இலவம் மரங்களையும் அதிகளவு வளர்த்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இலவம் காய் சீசன் இருக்கும். தற்போது காய்கள் காய்த்து நெற்றாக மாறும் பருவத்தில் உள்ளன. மரத்தில் உள்ள காய்களின் எண்ணிக்கையை பொறுத்து வியாபாரிகள் குத்தகைக்கு எடுக்கின்றனர். சராசரியாக ஒரு மரம் ரூ.1,000 முதல் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது. நல்ல தரமுள்ள 1,000 காய்களில் இருந்து அதிகபட்சமாக 24 கிலோ வரை இலவம் பஞ்சு கிடைக்கும்.
காய்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பஞ்சு மெத்தை, தலையணை தயாரிக்க பயன்படுகிறது. இதன் விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி போடி, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் நேரடியாக விவசாயிகளிடம் சென்று இலவம் காய்களை கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை கைவிட்டதால் வறட்சியின் காரணமாக போதிய விளைச்சல் இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதம் பெய்த பருவமழையால் மானாவாரி நிலங்களில் உள்ள மரங்கள் செழித்தன. இதனால் காய் விளைச்சலும் அமோகமாக உள்ளதால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலவம் காய்கள் மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் வியாபாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் காய் தரம் குறைந்து காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ பஞ்சு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு காய் தரமாக உள்ளதால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.