தூய்மையான நகராக மாற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம், கலெக்டர் கேசவன் வேண்டுகோள்

காரைக்காலை தூய்மையான நகராமாக மாற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கலெக்டர் கேசவன் கூறினார்.

Update: 2018-03-03 22:00 GMT
காரைக்கால்,

காரைக்காலில் தூய்மை இந்தியா திட்டத்தின் காரைக்காலில் உள்ள எம்.எம்.ஜி. நகர், வி.ஜி. நகர், வித்திஸ் நகர் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமையில் தூய்மைப்பணி நடைபெற்றது. அப்போது தெருக்கள், சாக்கடைகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தனர். வீடு வீடாக சென்று மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதன் அவசியம் குறித்தும், குப்பைகளை சாலைகளில் போடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. இதுகுறித்து, துண்டுபிரசுரங்கள் அடங்கிய விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

அப்போது கலெக்டர் கேசவன் பேசுகையில், ‘காரைக்காலில் 50 சதவீதம் மக்கள் தான் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள். மீதம் உள்ள 50 சதவீத மக்களும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண் டும். அப்போது தான் காரைக்கால் நகரம் விரைவாக தூய்மை அடையும். காரைக்காலை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்’ என்றார்.

இந்த தூய்மை பணியில் காரைக்கால் பாரதியார் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காரைக்கால் நகராட்சி ஆணையர் சுதாகர், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி லட்சுமிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்