கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-03-03 22:45 GMT
வேலூர்,


முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல், முன்னாள் நகர தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி சிதம்பரம் கைது நடவடிக்கையை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்