புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் வருமானவரித்துறை ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என நாமக்கல்லில் நடந்த வருமானவரித்துறை ஊழியர்கள் சம்மேளன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்,
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் 11-வது தமிழ் மாநில பிரதிநிதிகள் மாநாடு நேற்று முன்தினம் நாமக்கல்லில் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு சம்மேளன தலைவர் மீராபாய் தலைமை தாங்கினார்.
மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் மயத்தை ஒழித்து, காலிப்பணியிடங்களில் தகுதியான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
வருமானவரித்துறையில் பணி நியமனம் பிராந்திய அடிப்படையில் இருக்க வேண்டும். வருமானவரித்துறையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மருத்துவபடி உள்ளிட்டவைகளை உடனுக்குடன் வழங்கவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருமான வரித்துறை அலுவலர்களிடம் தேவையற்ற புள்ளி விவரங்களை கேட்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சம்மேளன தலைவராக மீராபாய், பொதுச்செயலாளராக வெங்கடேசன், பொருளாளராக வீரபத்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து வருமானவரித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.