பழவேற்காட்டில் வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

வேன்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-03-03 21:30 GMT
பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு நடுவர் மாதர்குப்பத்தை சேர்ந்தவர் மார்சல் (வயது 35). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் தனது நண்பரான சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த நிர்மல் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பழவேற்காட்டில் இருந்து சென்னை வந்து விட்டு பழவேற்காட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பழவேற்காடு பகுதி வளைவில் செல்லும்போது தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மார்சல், நிர்மல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த உடன் வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்