திருவள்ளூரில் வன்கொடுமை தடுப்புக்குழு கூட்டம்

திருவள்ளூரில் வன்கொடுமை தடுப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2018-03-03 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016-ன்படி திருவள்ளூர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார்.

இந்த குழுவின் உறுப்பினர்களான மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள், காவல்துணை கண்காணிப்பாளர்கள், அரசு வக்கீல்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர் உதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள் இந்த சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சட்டத்தை செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்கள் அமைப்புகளின் பங்கு மற்றும் பணியின் செயல்பாடுகள் குறித்தும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள், செயல்படுத்துதல் தொடர்பாகவும் குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்படி சட்டப்பிரிவின் கீழ், பதியப்படும் வழக்குகளில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் துறைக்கும் மற்றும் அரசு வக்கீல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பிரபு, வெங்கடேஷ், வசந்தி, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்