குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடகாரவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி வடகாரவயல் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று வடகாரவயல் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்மோட்டார் பழுதை சரி செய்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் மின்மோட்டார் பழுது சரி செய்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.