தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
நாகர்கோவில் அருகே வடமாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி இறந்த சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அலோக் மாலிக். இவர் நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பகுதியில் தங்கியிருந்து வலை கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மமாலி (வயது 18) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தெங்கம்புதூர் பகுதி கலைஞர் காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். மமாலி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தெங்கம்புதூர் வந்த பின்பு, மமாலியை கணவர் அலோக் மாலிக் அக்கம் பக்கத்தாரிடம் பேசக்கூடாது என கூறி இருந்தார். கணவரின் பேச்சை மீறி மமாலி பக்கத்து வீட்டாருடன் பேசியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அலோக் மாலிக், மனைவியை தகாத வார்த்தைகள் பேசினார். இதனால் மனமுடைந்த மமாலி தூக்கில் தொங்கினார். உடனே, அலோக் மாலிக், மனைவியை மீட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சிங்களேயர்புரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். மமாலியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தெங்கம்புதூர் கிராம நிர்வாக அதிகாரி கோபிகா, சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து அலோக் மாலிக் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அலோக் மாலிக் கைது செய்யப்பட்டார்.
மமாலி இறந்த தகவல் ஒடிசாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒடிசாவில் மமாலியின் பெற்றோர், தங்கள் மகளை கடத்தி சென்றதாக அலோக் மாலிக் மீது ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில் மமாலி இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மமாலியின் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மமாலியின் உறவினர்கள் வந்தவுடன் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.