புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும், கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகையில் இருந்தபடியே அனைத்து துறை செயலர்கள், இயக்குனர்கள் ஆகியோருடன் மொபைல் போன் மூலம் பேசி கருத்துகளை கேட்டு ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
‘நல்ல நிர்வாக திறனுக்கு தகவல் பரிமாற்றம் மிக அவசியம். எனவே ஒவ்வொரு துறையும் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் ஆடியோ கருத்தரகின் மூலமாக நிர்வாக பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் தகவல் தொடர்பில் இருப்பேன்’ என்றார்.
இதில் புதுச்சேரியை முழுமையாக ரசாயன கலப்பு இல்லாத இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்ற வேண்டும், சோம்நாத் கோவிலை முன்மாதிரியாக கொண்டு கடற்கரையை புனரமைக்க வேண்டும், உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும், தூய்மை இந்தியா திட்டத்தின் புதுவை பல்கலைக்கழக மாணவர்களை இணைக்க வேண்டும், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை விரைவில் அறிவிக்க வேண்டும்.
ஏரிகளை தூர்வாரி புனரமைக்க இளைஞர்களை பயன்படுத்த வேண்டும், கோவர்த்தன் திட்டத்தை அமல்படுத்துதல், மத்திய அரசு திட்டங்களை காலத்தோடு அமல்படுத்துதல் போன்றவற்றில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நீதிமன்றத்தை அதிபட்சமாக பயன்படுத்த வேண்டும், பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், கவர்னர் அலுவலகத்தில் பெறப்படும் மக்களின் மனுக்களை பற்றி விவரங்களை நிர்வாக செயலருக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் தேங்கியுள்ள புகார் கடிதங்கள் பற்றிய விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
ஒவ்வொரு துறையும் பயிற்சிகள் அடங்கிய நாட்குறிப்பை தயாரிக்க வேண்டும். பட்ஜெட் அறிக்கையை மறுபடி மறு ஆய்வு செய்து தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும், கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், விதிகளின் படி இயங்கும் பயன்பாட்டு சான்றிதழ் முறையாக அளித்துவரும் பொது நலச்சங்களுக்கு நிதியுதவிகளை விரைவில் அளிக்க வேண்டும்.
கவர்னர் மாளிகை ஒப்புதல் வழங்கிய விவரத்தை வலைதளங்களில் வெளியிடுவதை போல அரசு செயலகமும், துறை அலுவலகங்களும் ஒப்புதல் வழங்கிய கோப்புகளின் விவரங்களை வெளியிட வேண்டும். கொல்லைப்புற நியமனங்கள் தொடர்பான நிர்வாக சீர்திருத்த துறை ஆணையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி பேசினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 60-க்கு மேற்பட்டவர்களுடன் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு தூதரக அதிகாரி கேத்ரின் ஸ்வார்டு, புதுச்சேரி அரசு தலைமைச் செயலர் (பொறுப்பு) கந்தவேலு, மாவட்ட கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், போலீஸ் டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம், போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் ராஜீவ்ரஞ்சன், சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.