திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கொண்டாடினர். பிறந்தநாள் அன்று திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தங்கமோதிரம் வழங்கினார்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டத்தில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தங்க மோதிரங்களை வழங்கினார். மேலும் அவர், குழந்தைகளின் தாயார்களுக்கு ஹார்லிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார். அத்துடன், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அனைத்து உள்நோயாளிகளுக்கும் ஹார்லிக்ஸ், பிரட் வழங்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரில் தி.மு.க. மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காயாமொழியில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் தனலட்சுமி கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம் தி.மு.க. கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரியில் தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம், கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். குரும்பூரில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தென்திருப்பேரை பஸ் நிறுத்தம் அருகே மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க. நகர செயலாளர் ராமஜெயம் கட்சிக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி பஸ் நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு, மெயின் பஜார் மற்றும் குலசேகரன்பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட இடங்களில் தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பரமன்குறிச்சியில் 65 பேருக்கு வேட்டி வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் பஸ் நிலையம் முன்பு முத்து தலைமையில் தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர அவை தலைவர் கிதுரு முகமது, நகர பொருளாளர் தாஜூதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாயர்புரம் நகர தி.மு.க. சார்பில் மெயின் பஜாரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சி ஏற்றப்பட்டது. பண்டாரவிளை, வர்த்தகரெட்டிபட்டியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க. நகர இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன் ஏற்பாட்டில், தங்க மோதிரம் வழங்கும் விழா நடந்தது.
தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார். நகர செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மெயின் ரோடு தமிழரசன் படிப்பகம் முன்பு மாவட்ட விவசாய அணி அமைப்பார் ராமர் கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாலாட்டின்புத்தூரில் ஒன்றிய துணை செயலாளர் சந்திரசேகர் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இனாம் மணியாச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாராம் கட்சி கொடியேற்றி, சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.