வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து தொழிலாளி படுகாயம்
குன்னூர் அருகே அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற் சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அருவங்காடு
வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து தொழிலாளி படுகாயம்
சுரேஷ்
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமானது ஆகும். தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
இந்த தொழிற்சாலையில் ராணுவத்துக்கு தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் கழிவு பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டு அவை அங்கேயே எரித்து பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் கழிவு பொருட்களை எரித்து அகற்றும் பணி தொழிற்சாலையில் நடந்தது.
அப்போது பாதுகாப்பு பணியில் தொழிற்சாலை தீயணைப்பு பிரிவினரும் உடன் இருந்தனர். திடீர் என்று கழிவு பொருட்கள் எரிந்த பகுதியில் இருந்து தீப்பொறி எதிர்பாராத விதமாக அங்கு பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர் சுரேஷ் (வயது 44) என்பவர் மீது விழுந்தது. இதில் உடலில் தீப்பரவி படுகாயம் அடைந்தார். உடனடியாக தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
படுகாயம் அடைந்த சுரேசுக்கு வெடிமருந்து தொழிற்சாலை ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தொழிற்சாலை துணை பொது மேலாளர் நரேந்திரா கூறும்போது, தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் எரிக்கப் பட்ட பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றார்.