பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடக்கம்: தமிழ் முதல் தாள் தேர்வினை 8,859 மாணவ-மாணவிகள் எழுதினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ் முதல் தாள் தேர்வினை 8,859 மாணவ, மாணவிகள் எழுதினர்.
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 29 மையங்களில் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 7.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அப்போது சில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு பேனா உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி வாழ்த்து கூறி தேர்வு மையத்தில் விட்டு விட்டு சென்றதையும் காண முடிந்தது. பின்னர் மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து படித்ததை கடைசியாக ஒரு முறை திருப்பி பார்த்தனர். பின்னர் 9.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதில் தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 4,395 மாணவர்களும், 4,523 மாணவிகளும் என 8,918 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் முதல் தாள் தேர்வில் 8,859 பேர் கலந்து கொண்டு எழுதினர். 59 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன. தேர்வெழுத தகுதி பெற்றிருந்த 88 தனித்தேர்வர்களில் 10 பேர் தேர்வுக்கு வரவில்லை. தமிழை தவிர வேற்று மொழியை பாடமாக எடுத்து படித்த வந்தவர்களும் தேர்வு எழுதினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 29 தலைமை ஆசிரியர்களும் மற்றும் 29 துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களாக 7 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 556 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்பாடுகளை கண்காணிக்க 71 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். எனினும் தமிழ் முதல் தாள் என்பதால் எவ்வித ஒழுங்கீன செயலிலும் ஈடுபட்டதாக மாணவர்கள் பிடிபடவில்லை.
இந்த நிலையில் சிறுவாச்சசூர் மற்றும் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மையங்களுக்கு திடீரென மாவட்ட கலெக்டர் சாந்தா வருகை தந்து ஆய்வு செய்தார். அப்போது குறித்த நேரத்தில் தேர்வு தொடங்கி விட்டதா? என்பது குறித்தும், தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு வேறு ஏதும் சிக்கல் உள்ளதா? என்பது குறித்தும் அறை கண்காணிப்பாளர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் தேர்வில் மாணவர்களின் வருகை சீராக இருக்கிறதா? என்பது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி, மாநில கல்வி வளர்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் மார்க்ரெட் எமிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேப்போல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விடைத்தாள்-வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்தார். மாவட்ட கல்வி அதிகாரி பிருதிவிராஜன் தலைமையிலான குழுவினர் குரும்பலூர், அம்மாபாளையம், செட்டிகுளம், நக்கசேலம் அரசு பள்ளி தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர். அப்போது தேர்வறையில் செல்போன் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
3 மணி நேரம் நடந்த தமிழ் முதல் தாள் தேர்வு சரியாக 1.15 மணியளவில் நிறைவடைந்தது. விடைத்தாளை அறைக்கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மாணவர்கள் தங்களது சந்தேகங்களை ஆசிரிய, ஆசிரியைகளிடம் கேட்டு தெளிவுபடுத்தினர். எனினும் தமிழ் தேர்வு என்பதால் பெரும்பாலான மாணவர்கள் திருப்திகரமாக எழுதிய மகிழ்ச்சியுடனேயே வெளியே வந்ததை பார்க்க முடிந்தது. செவித்திறன் குறைபாடு, பார்வைகுறைபாடு உள்ளிட்ட தேர்வு எழுத முடியாத சூழலிலிருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியாக ஆசிரிய-ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதிக் கொடுத்தனர். அவர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-ம் தாளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது.