பெரிய காஞ்சீபுரம் பிளஸ்-2 தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
பெரிய காஞ்சீபுரம் பிளஸ்-2 தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சீபுரம்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. காஞ்சீபுரத்தில் உள்ள பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்ககளிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 119 மையங்களில் நடக்கிறது. இதில் 17 மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் அதிக எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 2 பிரிவுகளாக தேர்வு மையம் பிரிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மையத்திற்கும் 136 முதன்மை கண்காணிப்பாளரும், 136 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பொது தேர்வை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 309 மாணவர்களும், 25 ஆயிரத்து 355 மாணவிகளும், 2 ஆயிரத்து 309 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 50 ஆயிரத்து 973 பேர் எழுத உள்ளனர். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் வழங்குவதற்கு 19 விடைத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாட்களில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல ஆயுதம் தாங்கிய போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 69 பள்ளிகளில் 145 பேர் தேர்வு எழுத உள்ளார்கள். அவர்கள் சொல்வதை எழுத 74 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்னர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி உடனிருந்தார்.