ஆத்தூர் அருகே புன்னக்காயலில் உதவி கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நாளை முதல் கடலுக்கு செல்ல மீனவர்கள் முடிவு
ஆத்தூர் அருகில் உள்ள புன்னக்காயல் கிராமத்தில் உதவி கலெக்டர் தலைமையில் நேற்று நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.
ஆறுமுகநேரி,
ஆத்தூர் அருகில் உள்ள புன்னக்காயல் கிராமத்தில் உதவி கலெக்டர் தலைமையில் நேற்று நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடிவு செய்தனர்.
ஊர்கமிட்டி தலைவர் மீது வழக்கு
ஆத்தூர் அருகில் உள்ள புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்த லூபர்சா என்பவர் கலப்பு திருமணம் செய்துள்ளார். அவரை ஊருக்குள் வரக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறியதை தொடர்ந்து, ஊர் கமிட்டி தலைவர் செல்வராஜ், பொருளாளர் ஷெல்டின் ஆகியோர் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் முதல் அந்த ஊரை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேலு தலைமையில், தாசில்தார் அழகர், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் புன்னக்காயல் கிராமத்துக்கு சென்றனர்.
மீனவர்கள் முடிவு
அங்கு உதவி கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஊர் கமிட்டி தலைவர் உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கிராம மக்கள் கூறுகையில்,‘ எங்கள் ஊரை பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே எங்கள் ஊரில் கலப்பு திருமணம் செய்த 6 தம்பதியர் சந்தோஷமாக வசித்து வருகின்றனர். அவர்களை யாரும் தொந்தரவு செய்ததில்லை. இந்த நிலையில் யாரையும் நாங்களோ(மக்கள்), ஊர் கமிட்டியினரோ மிரட்டவில்லை. தவறான தகவலின் அடிப்படையில் ஊர்கமிட்டி தலைவர் உள்பட 2பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதை வாபஸ் பெற வேண்டும். மற்றபடி எங்கள் கிராமத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றனர். இதை தொடர்ந்து உதவி கலெக்டர்,‘ வழக்கு தொடர்பாக பின்னர் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம். அதற்காக போராட வேண்டாம். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும்’ என்றார். இதை தொடர்ந்து மீனவர்கள் நாளை(சனிக்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாக ஒப்புக் கொண்டனர்.