விதிமுறைகளை மீறிய 11 கடை உரிமையாளர்கள் மீது வழக்கு
விதிமுறைகளை மீறிய 11 கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர், நாகை மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கின்றதா என்பது குறித்து தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர், முத்துப்பேட்டை, நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் சென்னை தொழிலாளர் துறை இணை ஆணையர் (ஆய்வுகள்) குமரன் தலைமையில், தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் மற்றும் குழுவினர் நிறுவனங்கள், கடைகளை ஆய்வு செய்தனர்.
இதுறித்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாஸ்கரன் கூறுகையில், இந்த ஆய்வில் காலமுறை மறுமுத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் பயன்படுத்திய 2 கடைகளில் இருந்து தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பொட்டல பொருட்களில் தயாரிப்பாளர் பெயர், முகவரி, பொருளின் பெயர், எண்ணிக்கை, எடை, தயாரிக்கப்பட்ட மாதம், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற அறிவிப்புகள் இல்லாத பொட்டல பொருட்களை விற்பனை செய்த 9 கடை உரிமையாளர்கள் உள்பட விதிமுறைகளை மீறிய 11 பேர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
எனவே பொட்டல பொருள் விதிகளின்கீழ் அனைத்து அறிவிப்புகளும் உள்ள பொட்டலங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். முத்திரையிட்ட எடையளவைகளை மட்டும் வியாபாரத்தில் உபயோகப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களின்கீழ் அனைத்து பதிவேடுகளும், படிவங்களும், முறைப்படி பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.