திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி திருவிழா
‘தமிழ் கடவுள்‘ முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக பெருமை பெற்று விளங்கும் ‘திருச்சீரலைவாய்‘ என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தேரில் எழுந்தருளல்
விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திரு விழாவான நேற்று கோலாகல மாக நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி தேரடி திடலில் உள்ள சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் வள்ளி- தெய்வானை அம்பாள் களுடன் சுவாமி குமரவிடங்க பெருமானும், மற்றொரு தேரில் தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர்.
அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரில் எழுந்தருளிய விநாயகர், சுவாமி-அம்பாள்களுக்கு சூட்டுவதற்காக ஏராளமான மாலைகளை வழங்கினர். அந்த மாலைகள் சுவாமி, அம்பாள்களுக்கு சூட்டப் பட்டன. காலை 5.45 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அந்த தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி, காலை 6.35 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டம்
இதனை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் தொடங்கியது. கோவில் தக்காரும், ‘மாலை முரசு‘ நிர்வாக இயக்குனருமான இரா.கண்ணன் ஆதித்தன், இரா.கதிரேச ஆதித்தன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்ட த்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேலு, கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, பா.ஜ.க. மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டி நாடார்,
காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் அக்தார் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், குமரேச ஆதித்தன், சிவனேச ஆதித்தன், முருகன் ஆதித்தன், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விண்ணதிர பக்தி கோஷங்கள்
அலங்கரிக்கப்பட்ட தெய்வானை யானை முன்செல்ல, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேரடி மாடசாமி கள், தேரின் முன்பாக மேளதாளம் முழங்க ஆடியவாறு சென்றனர். தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பியவாறு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் மேள வாத்தியங் களுடன் பஜனை பாடல்களை பாடியவாறு தேரின் முன்பாக சென்றனர். பக்தர் ஒருவர் மயில் இறகுகளால் செய்யப் பட்ட பெரிய விசிறியால், தேர் இழுத்த பக்தர்களுக்கு விசிறி யவாறு சென்றார். பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகளிலும் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
வட்டமிட்ட கருடன்கள்
தேரோட்டம் தொடங்கி யதும், வானத்தில் 3 கருடன்கள் வட்டமிட்டன. மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள் தேரின் முன்பாக காவடி எடுத்து ஆடியவாறு சென்றனர். சுவாமி தேர் காலை 8.33 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து தேரில் வீற்றிருந்த சுவாமி- அம்பாள்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் தேரை தொட்டு வழிபட்டனர். சுவாமி- அம்பாள்களையும் வழிபட்ட னர்.
அம்பாள் தேர்
இதனை தொடர்ந்து 3-வதாக தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடந்தது. காலை 8.40 மணிக்கு தெய்வானை அம்பாள் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளிலும் சுற்றி வந்த தேர் காலை 9.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்ட விழாவை யொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பஸ்கள்
வணிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில், நீர்மோர், தண்ணீர் பாக்கெட்டுகள், குளிர்பானங் கள், கேசரி, கலவை சாதங்கள் போன்றவை பக்தர்களுக்கு ஆங்காங்கே இலவசமாக வழங்கப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மேற்பார்வையில், திருச் செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று தெப்ப திருவிழா
11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி, சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்துக்கு சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி- அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி, 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி- அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 9 மணிக்கு சுவாமி- அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள்.