நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களின் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-03-01 20:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களின் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த முருகன் மகன் அழகுராஜ் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் மனம் வெறுப்படைந்த அழகுராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகுராஜ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்

பாளையங்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி ஆனந்தம்மாள் (63). இவர், கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆனந்தம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை சந்திப்பு பெருமாள் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் கண்ணன் (52) ஆட்டோ டிரைவர். இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. இதனால் மனம் வெறுப்படைந்த அவர், பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளியின் மனைவி

களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் ராஜா. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜான்சி ஜெபசெல்வி (29). ராஜாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனை ஜான்சி ஜெபசெல்வி கண்டித்தாராம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்து காணப்பட்ட ஜான்சி ஜெபசெல்வி சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்சி ஜெபசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்