தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

Update: 2018-03-01 23:00 GMT
தஞ்சாவூர்,


தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 280 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 95 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 267 மாணவர்களும், 16 ஆயிரத்து 235 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 502 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும் தனித்தேர்வர்கள் 3 மையங்களில் 778 பேர் எழுதினர்.

இதில் மாற்த்திறனாளி மாணவர்கள் 86 பேரும் அடங்குவர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேச முடியாதவர்கள் மற்றும் மனவளர்சசி குன்றியவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பார்வையற்றவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.


இதற்காக 2 ஆயிரத்து 668 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெற்றதை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்