பிளஸ்-2 தேர்வு தொடங்கியது திருச்சி மாவட்டத்தில் ‘காப்பி’ அடித்ததாக 5 மாணவர்கள் பிடிபட்டனர்
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. மொத்தம் 35 ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். காப்பி அடித்ததாக 5 மாணவர்கள் பிடிபட்டனர்.
திருச்சி,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 430 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 112 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இது தவிர பறக்கும் படையினரும் 250 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தேர்வு கூடத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டன. தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக சில மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அப்போது பெற்றோர் அவர்களுக்கு பூக்கள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தைரியம் கூறி அனுப்பினர். நேற்றைய தேர்வை 230 பேர் எழுத வராமல் ‘ஆப்சென்ட்’ ஆனார்கள். இதனால் நேற்று 35 ஆயிரத்து 200 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
லால்குடி கல்வி மாவட்டத்தில் ஒரு மாணவர், முசிறி கல்வி மாவட்டத்தில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதிய 4 மாணவர்கள் என மொத்தம் 5 பேர் ‘காப்பி’ அடித்ததாக பிடிபட்டனர். அவர்கள் உடனடியாக தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தேர்வு தொடங்கிய முதல்நாளே திருச்சி மாவட்டத்தில் 5 மாணவர்கள் காப்பி அடித்ததாக பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி திருச்சி சேவாசங்கம், கேம்பியன், பிலோமினாள் மற்றும் ஸ்ரீரங்கம் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உடன் சென்று இருந்தார்.