கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குழித்துறை,
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார் முடித்து வைத்தார். இதில் திரளான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு பா.ஜனதா அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.