விவசாயியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வேளாண் அதிகாரி உள்பட 3 பேர் கைது
விவசாயியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வேளாண் அதிகாரி உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஜல்னா,

இழப்பீடு கேட்டார்
ஜல்னா மாவட்டம் மாவுஜ் தவுல்காவ் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் சொந்தமாக மாந்தோப்பு வைத்திருந்தார். இந்த நிலையில் நாக்பூர்- மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டத்திற்காக இவரது விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் நிலத்தில் இருந்த 1,000 மா மரங்கள் வெட்டப்பட்டன.
இதையடுத்து விவசாயி இதற்கு தகுந்த இழப்பீடு கேட்டு அந்த பகுதி தாலுகாவை சேர்ந்த வேளாண் அதிகாரி ரமேஷ்வர் அன்னாசாகேப் என்பவரிடம் விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த அவர் விவசாயியிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் தந்தால் அதிக இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். இதற்கு விவசாயியும் சம்மதம் தெரிவித்தார்.
பிடிபட்டனர்
ஆனால் லஞ்சம் தர விரும்பாத அவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் கொடுத்த யோசனைப்படி விவசாயி, வேளாண் அதிகாரி ரமேஷ்வர் அன்னாசாகேப்பை தொடர்பு கொண்டு முதற்கட்டமாக ரூ.5 லட்சம் தருவதாக கூறினார்.
இதையடுத்து வேளாண் அதிகாரி அவரிடம் இருந்து பணத்தை வாங்கிவர இடைத்தரகர்கள் 2 பேரை அனுப்பி வைத்தார். அவர்கள் விவசாயியிடம் இருந்து பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வேளாண் அதிகாரி ரமேஷ்வர் அன்னாசாகேப்பையும் கைது செய்தனர்.
அரசு வக்கீல் கைது
இதேபோல் பால்கர் மாவட்டத்தில் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக செயல்பட்டு, வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் தினேஷ் பாட்டீல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.