மடத்துக்குளம் ஆற்றுப்பாலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மடத்துக்குளம் ஆற்றுப்பாலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம்,
கோவை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மடத்துக்குளம். இந்த பகுதியில் ஓடும் அமராவதி ஆறு திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையாக அமைந்துள்ளது.
இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. மேலும் அருகில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்த சாலையின் வழியாக சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மடத்துக்குளம் தாலுகா எல்லைப்பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டுவருகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக இந்த பகுதியை கடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது.
மேலும் இறைச்சிக்கழிவுகளை தின்பதற்காக கூட்டம், கூட்டமாக கூடும் நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி அந்த பகுதியில் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த வழியாக செல்பவர்களையும் நாய்கள் விரட்டிக்கடிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க சாலையோரம் கொட்டப்பட்டிருக்கும் இறைச்சிக்கழிவுகளை தின்பதற்காக எடுத்துச்செல்லும் பறவைகள், அவற்றை அமராவதி ஆற்றில் போட்டுவிடுவதால் ஆற்றுநீர் மாசுபடுகிறது
இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும், இறைச்சியை விற்பனை செய்வதற்கும் அரசு பல விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் எந்த விதிகளையும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள இறைச்சிக்கடைக்காரர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது சுத்தம் செய்து, இங்கு இறைச்சிக்கழிவுகளை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதில்லை. மேலும் அமராவதி ஆற்றின் கரையில் கட்டிடக்கழிவுகளும் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் ஆற்றின் அகலம் குறைந்து கொண்டே வருகிறது.
எனவே இந்த பகுதியில் இறைச்சிக்கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டுவதற்கும், கட்டிடக்கழிவுகளை கொட்டுவதற்கும் நிரந்தரமாக தடை விதிப்பதுடன், அதிகாரிகள் இந்த பகுதியை தினமும் கண்காணித்து, இறைச்சிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.