ரவுடி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்மாமன்கள் உள்பட 4 பேர் கைது
ரவுடி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்மாமன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக்குளத்தை சேர்ந்தவர் அமுல்ராஜ்(வயது 40). ரவுடியான இவர் மீது கரூர், திருச்சி மாவட்டங்களில் 2 கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சித்தலவாய் ஊராட்சி, பூஞ்சோலைபுதூரில் உள்ள காட்டு பகுதியில் அமுல்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பணன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், சுரேஷ்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கணேசன், செந்தில்குமார், நடேசன், அழகுராம் ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கோவக்குளத்தை சேர்ந்த குருசாமி(40) நாமக்கல் மாவட்டம் வேலூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். மேலும் கொலைக்கு தொடர்புடைய கோவக்குளத்தை சேர்ந்த தாய் மாமன்கள் கோபால் என்கிற கருங்கோபால்(60), கன்னியப்பன்(55), நண்பர்கள் செந்தில்குமார்(40), மலையாளன்(35) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சொத்து பிரச்சினையில் அமுல்ராஜிக்கும், தாய்மாமன்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சமாதானம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என அமுல்ராஜை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று மது அருந்தி உள்ளனர். அதன் பிறகு அமுல்ராஜை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை நடந்து 24 மணி நேரத்தில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை கரூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பாராட்டினார்.