காதல் திருமணம் செய்த பெயிண்டர் தற்கொலை

நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த பெயிண்டர், குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-28 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் பெரியப்பட்டி சாலை ராமசாமி நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 21), பெயிண்டர். இவர் ஓராண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தேவி (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 26-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய சந்தோஷ்குமார் திடீரென வாந்தி எடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஏன்? என கேட்டு உள்ளார். அப்போது சந்தோஷ்குமார் தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறி உள்ளார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்இன்றி சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தேவி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சந்தோஷ் குமார் குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்