மதுபான கடை மீது குண்டு வீசிய வழக்கில் எழிலரசி உள்பட 4 பேர் கோர்ட்டில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரின் மதுபான கடை மீது வெடி குண்டு வீசிய வழக்கில் பெண் தாதா எழிலரசி உள்பட 4 பேர் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
காரைக்கால்,
காரைக்கால் திரு-பட்டினத்தை சேர்ந்தவர் சாராய வியாபாரி ராமு. இவர் தனது 2-வது மனைவி எழிலரசியுடன் கடந்த 2013-ம் ஆண்டு காரைக்கால் காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ராமுவின் முதல் மனைவி வினோதா ஏற்பாடு செய்த கூலிப்படையால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். எழிலரசி படுகாயத்துடன் உயிர்தப்பினார்.
இந்த கொலைக்கு பழிக்கு பழியாக, காரைக்கால் நிரவியில் தனது திருமண மண்டப கட்டுமான பணியை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமாரை கடந்த ஆண்டு கூலிப்படையினர் கொலை செய்தனர். தப்பியோடிய கூலிப்படையினர் மேலவாஞ்சூர் சாலையில் உள்ள சிவக்குமாருக்கு சொந்தமான மதுபான கடை மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர்.
இது தொடர்பாக ராமுவின் 2-வது மனைவியும், பெண் தாதாவுமான எழிலரசி, கூலிப்படையை சேர்ந்த விக்ரமன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. புதுவையில் உள்ள ஓட்டலில் ரவுடிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டிய வழக்கில் எழிலரசி, விக்ரமன் உள்பட நான்கு பேரும் தற்போது காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் மதுபான கடை மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் காரைக்கால் கோர்ட்டில் ஆஜராக நேற்று புதுச்சேரியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். நீதிபதி பிரபு முன்பு எழிலரசி உள்ளிட்ட 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வருகிற 16-ந் தேதி ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் புதுவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.