கார்த்தி சிதம்பரம் கைது விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கார்த்தி சிதம்பரம் கைது விவகாரத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-02-28 22:45 GMT

புதுக்கடை,

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கூட்டாலுமூட்டில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாது:–

ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திய காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறைவனிடம் இரண்டற கலந்துவிட்டார்.

தமிழக மீனவர்கள் 15 பேரை ஈரான் நாட்டு ராணுவம் சிறை வைத்திருந்தது. அவர்களை மீட்க எடுத்த நடவடிக்கையின் பேரில், 15 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்துள்ளனர்.

முதியோர் காப்பக விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மவுனம் சாதிப்பது ஏன்? என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு நான் அழுத்தம் கொடுத்து வருகிறேன். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க தமிழக அரசு என்னை அழைத்தால் அவர்களுடன் இணைந்து செல்வேன்.

கார்த்தி சிதம்பரம் கைது விவகாரத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்