பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ‘சைக்கோ’ ஜெய்சங்கர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை
தமிழகத்தை சேர்ந்த ‘சைக்கோ’ ஜெய்சங்கர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு,
கற்பழிப்பு, கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழகத்தை சேர்ந்த ‘சைக்கோ’ ஜெய்சங்கர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
‘சைக்கோ’ ஜெய்சங்கர்
தமிழ்நாடு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பனங்காட்டூரை சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ‘சைக்கோ’ ஜெய்சங்கர் (வயது 40). லாரி டிரைவர். இவர், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். கற்பழிப்பு, கொலை, கொள்ளை என்று இவர் மீது 25-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஜெய்சங்கர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த வேளையில், அவர் சிறையில் உள்ள சக கைதிகள் மீது தாக்குதல் நடத்தினார். மேலும், அவர் லேசாக மனம் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டு வந்ததோடு, அவ்வப்போது சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன.
தற்கொலை
இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் பிளேடால் ஜெய்சங்கர் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சிறை அறையிலேயே துடிதுடித்து கொண்டிருந்தார். இதை சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறைக்காவலர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதோடு ஜெய்சங்கரை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அதிகாலை சுமார் 5.15 மணியளவில் ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.