கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பிரதமர் மோடி கடும் தாக்கு ‘பணம் கொடுக்காமல் பணிகள் எதுவும் நடக்காது’
தாவணகெரேயில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
பெங்களூரு,
தாவணகெரேயில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது “பணம் கொடுக்காமல் இந்த அரசில் எந்த பணியும் நடைபெறுவதில்லை” என்று கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு நேற்று 75-வது பிறந்த நாள் ஆகும்.
பிரதமர் மோடி வருகை
இதையொட்டி, பா.ஜனதா சார்பில் தாவணகெரேயில் விவசாயிகள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தாவணகெரேயில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் கர்நாடக மாநிலம் உப்பள்ளி விமான நிலையத்திற்கு மதியம் 2.52 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.
பின்னர் அங்கிருந்து மதியம் 3.05 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் தாவணகெரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். அங்கு அவரை பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி அனந்தகுமார் மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். அதன்பிறகு, விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கன்னடத்தில் முதலில் பேசினார். பின்னர் அவர் மாநாட்டில் பேசியதாவது:-
மக்கள் கோபம்
“கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. இந்த அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் வர இருக்கின்ற தேர்தலில் இந்த அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். அது உறுதி. இந்த அரசில் எந்த பணி நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். பணம் கொடுக்காவிட்டால் இந்த அரசில் எந்த பணியும் நடைபெறாது. இது பணத்துக்கான அரசு(சீடா ரூபியா சர்க்கார்). வளர்ச்சி பணிகள் நடைபெறுவதற்காக மாநில அரசு 10 சதவீத கமிஷன் பெறுகிறது. கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கும் போது வளர்ச்சி பணிகள் எப்படி நடைபெறும்.
பணத்துக்கான அரசு வேண்டுமா? அல்லது மக்கள் மீது அக்கறை கொண்ட அரசு வேண்டுமா? இங்கு ஒரு நேர்மையான அரசு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. மக்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காங்கிரசை தூக்கி எறிய தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கலாசாரம் தான் காரணம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த அரசு தொடர கூடாது
கர்நாடக மக்கள் காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப ஆவலுடன் இருக்கிறார்கள். நான் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் இந்த அரசு மீது கோபத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நாட்டில் மந்திரியாக இருப்பவர்கள் வீட்டில் சோதனை நடந்தது இல்லை. ஆனால் இங்கு டைரிகள் சிக்கி இருக்கிறது. தலைவர்கள் வீடுகளில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கி இருக்கிறது. இந்த பணம் எல்லாம் யாருடையது? இந்த அரசு தொடரக்கூடாது.”
காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. அதனால் கர்நாடகத்தில் மாற்றத்தை கொண்டு வருவது அவசியமாகி உள்ளது. மாநிலத்தை ஆளும் காங்கிரசை வெளியேற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அரசை வெளியேற்ற மக்கள் முடிவு எடுத்து விட்டனர். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் வளர்ச்சிக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
60 மாத பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரதமரின் பீமா பசல் திட்டம் பற்றி மக்கள் அறிந்துள்ளனர். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை. உதாரணமாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, கர்நாடகத்தில் ஆட்சி செய்த பா.ஜனதா அரசுக்கு வெறும் ரூ.73 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி இருந்தது. தற்போது கர்நாடகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மாநில் அரசு சரியாக பயன்படுத்தவில்லை.
மத்திய அரசு வழங்கும் நிதியை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பெங்களூரு, மைசூரு நகரங்கள் பொலிவை இழந்து காணப்படுகிறது.
காங்கிரஸ் அரசு மீதும், முதல்-மந்திரி சித்தராமையா மீதும் கர்நாடக மக்கள் கோபத்தில் உள்ளனர். வளமான கர்நாடகத்திற்கும், விவசாயிகள் வளர்ச்சிக்கும், நடுத்தர மக்களின் கனவுகள் நிறைவேறவும் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வருவது அவசியமாகும்.”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.