தொண்டி அருகே கண்மாயில் உடல் கருகிய நிலையில் பெண் சடலம்
தொண்டி அருகே உள்ள கண்மாயில் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ளது தளிர்மருங்கூர். இங்குள்ள பெரிய கண்மாயில் உடல் கருகிய நிலையில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. நேற்று மதியம் அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற சிலர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, தளிர்மருங்கூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேசிற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர் தொண்டி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜய்குமார் தலைமையில் தொண்டி போலீசார், தொண்டி வருவாய் ஆய்வாளர் மீனாம்பாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்த பெண் சிவப்பு நிற பாவாடை, கருப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். மேலும் அருகில் கருப்பு நிற பர்தா, சிறிய அளவிலான சில்வர் பாத்திரங்கள், 50, 100 ரூபாய் நோட்டுகள், குளிர்பான பாட்டில் போன்றவை கிடந்தன. முகம் முழுவதும் கருகி இருந்ததால் சடலத்தை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பெண்ணை நிர்வாணமாக்கி எரிக்கப்பட்ட பின்பு, பாவடையை அணிவித்து இருக்கலாம் என்றும் ஆசிட் பயன்படுத்தி எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்து வருகின்றனர். மேலும் இறந்த பெண் யார்? எந்த ஊர்? அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.