ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 472 காளைகள்
நாமக்கல் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 472 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவை முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 20 பேர் காயம் அடைந்தனர்.
சேந்தமங்கலம்,
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சேந்தமங்கலம் மாப்பிள்ளையான் தோட்டம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர்.
மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை அடையாளம் காணும் வகையில் மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட 3 நிறங்களில் பனியன் வழங்கப்பட்டு இருந்தது. இவர்கள் சுழற்சி முறையில் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், கரட்டுப்புதூர், போடிநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் பகுதிகளை சேர்ந்த காளைகள், திருச்சி, சேலம், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகள் என மொத்தம் 472 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 203 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர்.
ஜல்லிக்கட்டின் தொடக்கமாக நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் காளை முதலில் களம் இறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாடுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து கயிறு அறுத்து விடப்பட்டன. அவை தங்களை அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.
அதனையும் மீறி காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசுகள், கட்டில், மேஜை, குடம், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறிகள், வேட்டி-சட்டை மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் அடக்க முடியாத காளைகளுக்கு, அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளியே வரும் பெரும்பாலான மாடுகள் ஓட்டம் பிடித்து விட்டாலும், ஒருசில மாடுகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து, வீரர்களை பயமுறுத்தியதை காண முடிந்தது. போட்டியின் தொடக்கத்தில் மைதானத்தில் இருந்த மாடுபிடி வீரர்கள் இருவர் திடீரென ஒருவரை, ஒருவர் தாக்கினர். இதையடுத்து அவர்கள் இருவரும் போலீஸ் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் நவலடிப்பட்டி தாமோதரன் (வயது 23), பொட்டிரெட்டிப்பட்டி உதயகுமார் (30), ஜங்களாபுரம் முத்துகுமார் (30), பாலமுருகன் (24), மங்களபுரம் பாஸ்கர் (23), பச்சுடையாம்பட்டி விஜய் (19), சேந்தமங்கலம் ஆர்.பி.புதூர் கார்த்திக் (32), வலையப்பட்டி தனபால் (23), காந்திபுரம் தொகன் (67), ஆத்தூர் நிதிஷ்குமார் (32) உள்பட மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 20 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இவர்களில் மாடுபிடிவீரர்கள் முத்துகுமார், தனபால் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 18 பேரும் லேசான காயங்களுடன் வீடு திரும்பினர். இந்த ஜல்லிக்கட்டை காண சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும் திரளான பொதுமக்கள் அங்கு கூடி இருந்தனர். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெற்ற மைதானத்தை சுற்றிலும் திருவிழா போல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் மாடுபிடி வீரர்களை கைத்தட்டியும், விசில் அடித்தும் ஊக்கப்படுத்தியவாறு இருந்தனர்.
இதேபோல் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி, அவற்றின் மீது ஏறியும் ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை ரசித்தனர். இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இதில் சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாசம், சேந்தமங்கலம் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய மீனவரணி செயலாளர் பாஸ்கர், அக்கியம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் ரவிச்சந்திரன், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.