கடலூரில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூரில் சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்.

Update: 2018-02-27 22:00 GMT
கடலூர்,

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து சிறிது தூரம் நடந்து சென்றார். இதில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள், மது, சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.

மேலும் பொது மக்களிடம்சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

கடலூர் ஜவான்பவான் கட்டிடம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி அண்ணாபாலம், பாரதிசாலை வழியாக மஞ்சக்குப்பம் டவுன்ஹாலை சென்றடைந்தது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சுந்தரம், உதவி ஆணையர் (கலால்) நடராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்