மாவட்டத்தில், 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்
நாளை தொடங்கும் பிளஸ்-2 தேர்வை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் எழுது கிறார்கள்.
கிருஷ்ணகிரி,
பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களிலும் என மொத்தம் 66 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 102 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 257 மாணவர்களும், 6 ஆயிரத்து 343 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். ஓசூர் கல்வி மாவட்டத்தில் 74 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 752 மாணவர்களும், 5 ஆயிரத்து 115 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 176 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 9 மாணவர்களும், 11 ஆயிரத்து 458 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வுகளை கண்காணிக்க 170 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.