சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; விவசாயி பலி 2 பேர் படுகாயம்
சங்கரன்கோவில் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விவசாயி பலி
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 48). விவசாயி. இவர் நேற்று முன்தினம் சங்கரன்கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.
ஊரின் விலக்கில் இருந்து சங்கரன்கோவில்– திருவேங்கடம் சாலையில் வந்த போது, அவருடைய மோட்டார்சைக்கிளுக்கு பின்னால் வந்த பெருங்கோட்டூரை சேர்ந்த மகாலிங்கம் மகன் இருள்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாடசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
2 பேர் படுகாயம்
மேலும் இந்த விபத்தில் இருள்குமார் மற்றும் அவருடன் வந்த பெருங்கோட்டூரை சேர்ந்த மாரியப்பன் மகன் தமிழரசன் (19) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்த மாடசாமிக்கு பொன்னம்மாள் (34) என்ற மனைவியும், மனோஜ்குமார் (14) என்ற மகனும், வெண்ணிலா (16) என்ற மகளும் உள்ளனர். இந்த விபத்து பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.