வட்டி கட்டாததால் பிரச்சினை: கொசு மருந்து குடித்து பெண் தற்கொலை முயற்சி
வட்டி கேட்டு தொந்தரவு செய்ததால் ஆட்டோ டிரைவரின் மனைவி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து கணவன் - மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள இந்திராநகரை சேர்ந்தவர் மாயன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது55).இவர் 2 வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த குட்டிபாண்டி என்பவரிடம் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக சரி வர வட்டி பணம் தரவில்லை என கூறப்படுகிறது. வட்டி கேட்டு குட்டிபாண்டியும் அவரது மனைவி சித்ராதேவியும் தொந்தரவு செய்துள்ளனர்.
பாண்டியம்மாள் வீட்டிற்கு வந்து தரக்குறைவாக பேசியுள்ளனர். பணத்தை வாங்காமல் போக மாட்டோம் என கூறி அவரிடம் இருந்த ரூ.800- ஐ வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. அதனால் மனம் உடைந்து பாண்டியம்மாள் கொசு மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்தவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் குட்டிபாண்டி மற்றும் சித்ராதேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.