பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-02-26 22:30 GMT
கும்பகோணம்,

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். கும்பகோணம் ஒன்றிய தலைவர் பூபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலா கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். தீர்ப்பில் கூறியுள்ளபடி தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் உள்ளூர் நதிநீர் இணைப்பு திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்காணிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக விவசாயிகளின் நலன் காத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் பாபநாசம் ஒன்றிய தலைவர் பரத், கும்பகோணம் ஒன்றிய செயலாளர்கள் விக்னேஸ்வரன், தினேஷ்குமார், சந்தோஷ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் பிரபாகரன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் சிவா, துணை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய நிர்வாகி பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்