சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றதன் மூலம் 75 முறை 21.1 கிலோ மீட்டர் தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை
சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றதன் மூலம், 75-வது முறையாக 21.1 கிலோ மீட்டர் தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார்.
சென்னை,
சென்னை முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் 2004-ம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் சிக்கி இடது கால் மூட்டு பல துண்டு களாக உடைந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இருப்பினும், கடந்த பிப்ரவரி 2014-ல் 21.1 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் போட்டியை ஓடத் தொடங்கிய அவர், வெளிநாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று இதுவரை 75 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் ‘மெரினா ரன்னர்ஸ்’ சார்பில் நேற்று நடைபெற்ற 21.1 கி.மீ. போட்டியில் தமது 75-வது மாரத்தானை நிறைவு செய்தார். பல்வேறு சமுதாயப் பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்டு வரும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கும் இவர், இளைஞர்களின் உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஓடி வருகிறார்.
மாரத்தான் போட்டிகளில் 25 முறை 21.1 கி.மீ தூரம் பங்கேற்று ஓடியதற்காக, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’- லும், 29-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்தமைக்காக ‘ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’-லும் இடம் பிடித்து உள்ளார்.
டெல்லியில் உள்ள, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘வேல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டி’ இவருக்கு ‘மதிப்புறு முனைவர் பட்டம்’ வழங்கி உள்ளது. ‘வேல்டு ரெக்கார்டு யூனியன்’ சார்பில் ‘இன்டர்நேஷனல் கோல்டன் டிஸ்க் அவார்டு’ என்ற விருது கடந்த நவம்பர் 11-ந் தேதி மா.சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது.
வரும் 2019 பிப்ரவரி மாதத்துக்குள், 5 ஆண்டுகளில் 100 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓட வேண்டும் என்ற இலக்கோடு மா.சுப்பிரமணியன் ஓடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.