ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்

ஈகுவார்பாளையம், அத்திவாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

Update: 2018-02-24 23:36 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அம்மா திட்ட முகாம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ஸ்ரீதர், லட்சுமி நாராயணன், வருவாய் ஆய்வாளர்கள் பாரதி, வைலட், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மொத்தம் 62 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அதற்கான நலத்திட்ட உதவி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக சூரப்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா வரவேற்றார். முடிவில் கிராம உதவியாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அத்திவாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பூஷனகுமார், கிராம நிர்வாக அலுவலர் முருகைய்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 67 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து தனி தாசில்தார் லதா பெற்றுக்கொண்டார். இதில், 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 49 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 18 மனுக்களுக்கு அதற்கான ஆணையை ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் எழிலரசன், சரவணன், ராமு, சங்கர் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் தேவேந்திரன் நன்றி கூறினார்.

திருத்தணி அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரத்தில் அம்மா திட்டமுகாம் நடந்தது. இந்த முகாமில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி. திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 43 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் தகுதி வாய்ந்த விண்ணப்ப மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மற்றவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. முகாமில் திருத்தணி தாசில்தார் நரசிம்மன், சிறப்பு தாசில்தார் ரேணுகாதேவி, திருத்தணி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் இ.என்.கண்டிகை ரவி, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் டி.டி.சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்