மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2018-02-24 23:27 GMT
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொன்னேரியில் உள்ள அண்ணாசிலை, எம்.ஜி.ஆர்.சிலை, அம்பேத்கர் சிலைகளுக்கு முன்னால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் கூட்டுறவு சங்க இயக்குனர் பொன்னுதுரை, கூட்டுறவு சங்க தலைவர் பானுபிரசாத், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், நகர செயலாளர் உபயதுல்லா, பேரவை செயலாளர் செல்வகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர், நாலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துக்குமார், ஆறுமுகம், கோளுர் கோதண்டம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த சிற்றம்பாக்கத்தில் நடந்த விழாவில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் 770 பேருக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது அவருடன் சிற்றம்பாக்கம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் முருகைய்யன், கிளை செயலாளர் புருஷோத்தமன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சி.எஸ்.ரமேஷ், முத்து, சத்யா, ராயப்பன், பாளையம், மகி, மதன், பாஸ்கர் உள்பட பலர் உடன் இருந்தார்கள்.

அதேபோல திருவள்ளூரில் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ அ.பாஸ்கரன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானமும், காதுகேளாதோர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் காஞ்சீபுரம் காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடந்தது. கோவில்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சீபுரம் காந்திரோட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் மாலை அணிவித்து குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

காஞ்சீபுரம் பூக்கடைச்சத்திரம், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி உத்திரமேரூரில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் கே.லட்சுமணன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பி.சசிக்குமார், நகர இளைஞரணி செயலாளர் எம்.ஏ.துரைபாபு மற்றும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள். உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அ.தி.மு.க. தினகரன் அணி சார்பில் இளைஞர் பாசறை செயலாளர் டி.சந்திரமவுலி, ஒன்றிய செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, பேரூராட்சி செயலாளர் என்.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் கே.ஏ.சேகர், பூமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள்.

மேலும் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.தயாளன் தங்கமோதிரம் வழங்கினார். மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், புறநோயாளிகளுக்கும் இனிப்புகள் மற்றும் ரொட்டி, பால், பழங்களை வழங்கினார்கள்.

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா தலைமையில் நடந்தது. சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் ஜெயலலிதாவின் படத்தை கையில் ஏந்தியபடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து 70 கிலோ கேக்கை மாவட்ட செயலாளர்் கே.ஆறுமுகம் வெட்டி தொண்டர்கள் அனைவருக்கும் வழங்கினார்.

சிங்கபெருமாள் கோவில் மண்டபத்தெருவில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் 70 அடி உயர கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஏற்றி வைத்தார். எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து ஸ்ரீவாரி நகரில் நடந்த விழாவில், 5 ஆயிரம் இருளர் பழங்குடியினருக்கு இலவச வேட்டி, சேலையும், 100 நபர்களுக்கு சலவைப்பெட்டியும், 100 பெண்களுக்கு தையல் எந்திரமும், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு 3 சக்கர சைக்கிள்களும் சிங்கபெருமாள் கோவில் கிளை நூலகத்திற்கு பீரோ உள்பட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பென்ஜமின், எம்.பி.க்கள் ராமச்சந்திரன், மரகதம் குமரவேல், முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்