விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் வெளிநாட்டுக்காரர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்துடன் வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-24 23:02 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காக்கில் இருந்து சம்பவத்தன்று விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது வெளிநாட்டு பயணி ஒருவரின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அவரது உடைமைகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது உடைமையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த நபரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் மியான்மர் நாட்டை சேர்ந்த காம்கான்(வயது45) என்பது தெரியவந்தது.

காம்கான் யாருக்காக இந்த தங்கத்தை மும்பைக்கு கடத்தி வந்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்